#BREAKING | மன்னிப்பு கேட்ட போலீஸ்! எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ADMK Edappadi Palanisamy case Chennai HC Judgement Salem police Apologies
கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து தொடர்பான விவரங்களை தவறாக தெரிவித்து உள்ளதாக, திமுகவை சேர்ந்த தேனி மிலானி சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இது குறித்து குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசருக்கு அந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், மேற்கொண்டு இந்த வழக்கை பெரிது படுத்த வேண்டாம். இறுதி முடிவு அறிவிக்கும் வரை விசாரணையை தொடர வேண்டாம் என்று, சேலம் காவல் துறையினருக்கு அறிவுறுத்தி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில், சொத்து விவரங்களை மறைத்ததாக எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, விசாரணையையும் தொடங்கினர்.
நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் முன்பு ஆஜரான காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
இதனையடுத்து, இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை விசாரணையை பெரிது படுத்த வேண்டாம் என்று சேலம் போலீசாருக்கு மீண்டும் ஒருமுறை நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
மேலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
ADMK Edappadi Palanisamy case Chennai HC Judgement Salem police Apologies