பரபரப்புக்கு மத்தியில் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகூறிய நடிகர் விஜய்.!
actor vijay birthday wish to ntk leader seeman
நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் இன்று தனது 57வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை, தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
.jpg)
அதுமட்டுமல்லாமல், சீமானுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் விஜய் தொலைபேசியில் சீமானைத் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி பாக்கியராசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீப காலமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்றுள்ள சீமான், சினிமாவில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஓர் இனத்தை வழிநடத்துவதற்கு,தலைவனாக இருப்பதற்கு தகுதியாகக் கூறுவது அவமானகரமானது என்று கடும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
actor vijay birthday wish to ntk leader seeman