#Breaking: அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. கட்சி.. ஆட்சி உறுதி..! - Seithipunal
Seithipunal


வரும் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். மேலும், இந்த கட்சி தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான நடிகர் ரஜினிகாந்தின் ட்விட்டர் பதிவில், " ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.. வரும் சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, வெளிப்படையான, நாணயமான, ஊழலற்ற, ஜாதி - மதம் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.. அற்புதம்.. அதிசியம் கட்டாயம் நிகழும் " என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னதாகவே ரஜினி மக்கள் மன்ற மாவட்ட அளவிலான நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடக்கத்திற்கான தேதியை அறிவித்துள்ளார். 

கடந்த 1990 ஆம் வருடத்தில் இருந்த நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் ப்ரவேசத்திற்கான வரவேற்பு ரசிகர்களால் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உறுதியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

எனது கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் மக்களுக்கான சேவை செய்ய மட்டுமே வரவேண்டும் என்றும், காசு சம்பாரிக்கும் ஆசை உள்ளவர்கள் நமக்கு தேவையில்லை என்றும் ரஜினிகாந்த் ஏற்கனவே கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Rajinikanth Political Entry Confirmed by Twitter Post 3 December 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->