மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை கார் மோதி விபத்து...! - எஸ்.ஐ. உட்பட 4 பேர் காயம்....! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், காவலர்களுடன் இணைந்து மாநிலம் முழுவதும் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் புழல் சூரப்பட்டு அருகே 200 அடி சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த பறக்கும் படை அதிகாரி சுரேந்தர், காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், காவலர் ஆரிப் மற்றும் வீடியோகிராபர் விஸ்வநாதன் ஆகிய நான்கு பேரும் காயமடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident Madhavaram Assembly Constituency Flying Squad Car Collides 4 Injured Including Sub Inspector


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->