பேச்சுவார்த்தை தோல்வி! இன்று நள்ளிரவே தொடங்குகிறது ஸ்ட்ரைக்! சற்றுமுன் வெளியான அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


சென்னையில் இன்று (14/02/2020) செய்தியாளர்களை சந்தித்த ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கத் தலைவர்  சுப்பிரமணி, சென்னையில் ஆவின் நிர்வாகம் மற்றும்  ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர் சங்கம் இடையே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என தெரிவித்துள்ளார். 

மேலும் ஆவின் நிர்வாகம் தரப்பில் புதிய ஒப்பந்தம் போடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கத் தலைவர்  சுப்பிரமணி குற்றமத்தீயுள்ளார். இதனால் இன்று (14/02/2020) நள்ளிரவு முதல் ஆவின் பால் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதனால் நாளை பால் எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது. மேலும் இந்த அறிவிப்பு பால் தட்டுப்பாட்டை உருவாக்கும் என்பதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள், அதேபோல பால் உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இதனை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aavin tanker lorry announce strike


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal