தமிழகத்தில் பால் கொள்முதல் 70 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்..! - அமைச்சர் மனோ தங்கராஜ்.!!
Aavin Milk procuremen will be increased to 70lakh liters
நாகர்கோயிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் "தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும். முதற்கட்டமாக பால்வளத்துறையின் நிர்வாகத்தை சீர் செய்து கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தமிழக முழுவதும் தற்பொழுது ஆவின் நிறுவனம் மூலம் 45 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை 70 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிட்டு உள்ளோம்.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பால் பண்ணைகளில் பழைய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதை நீக்கிவிட்டு நவீனப்படுத்தும் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். பால் வளத்தை பெருக்குவதற்கு கால்நடைகளுக்கு தீவனப் பகுதிகளை உருவாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற துறைகளோடு இணைந்து முறையான திட்டத்தை வகுத்து முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வழங்க உள்ளோம்.

ஆவின் நிறுவனம் மூலம் 2 லட்சம் கறவை மாடுகளை மானிய விலையில் வழங்குவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை பாதிக்கும். ஒன்றிய அரசு இது போன்ற செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சாதாரண மக்களை பாதிக்காத வகையில் ஒன்றிய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்" என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
English Summary
Aavin Milk procuremen will be increased to 70lakh liters