பொதுமக்களுக்கு அதிர்ச்சி - ஆவின் பச்சை பால் பாக்கெட் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்.!
aavin green colour milk pocket sales cancelled
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவினிலிருந்து பல நிறங்களில் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் விற்பனை செய்யப்படும் ஆவினின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் குறைக்கப்படுவதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது அவை முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது.
அதாவது, வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 93 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் முகவர்களுக்கு பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தபட்டுள்ளது.

4 1/2 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு மாற்றாக, 3 1/2 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட சமன்படுத்தப்பட்ட ஊதா நிற பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த ஊதா நிற பாக்கெட் பச்சை நிற பாக்கெட் விற்பனை செய்யப்பட்ட அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் ஊதா நிற பாக்கெட் பால் அடர்த்தி குறைந்தும், சுவை இல்லாமலும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
English Summary
aavin green colour milk pocket sales cancelled