திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் உல்லாசம்; கர்ப்பமான பெண்ணுக்கு குழந்தை பிறப்பு; திருமணம் செய்ய காதலன் மறுப்பு..!
A young woman flirts with a man promising to marry her her lover refuses to marry her
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பாப்பான்குளம் தெரு பகுதியை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் 24 வயதுடைய பாலகிருஷ்ணன். இவரும் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண்ணும் கடந்த 2½ ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
பாலகிருஷ்ணன் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் கர்ப்பதாக்கியுள்ளார். இதையடுத்து குறித்த இளம்பெண், பாலகிருஷ்ணனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
-y2r2r.png)
அதற்கு பாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய தந்தை கொளஞ்சி, தாய் காமாட்சி ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி அந்த இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னும் காதலனின் வீட்டார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதையடுத்து இளம்பெண்ணின் தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் பாலகிருஷ்ணன் உள்பட 03 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A young woman flirts with a man promising to marry her her lover refuses to marry her