காதலுக்கு எதிர்ப்பு: வாட்ஸ்-அப்பில் தகவல்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.!
A young woman committed suicide by sending information on WhatsApp in kovai
கோவை மாவட்டத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பி விட்டு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பி.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ரங்கநாதன். இவருடைய மகள் மதுமதி (27). இவருக்கும், சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, இரண்டு பேரும் ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இவர்களது காதல் விவகாரம் முதுமதியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மது மதியின் பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த மதுமதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துள்ளார். மேலும் மதுமதி, பெற்றோருக்கு வாட்ஸ்-அப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து, விரைந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் மதுமதியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதுமதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A young woman committed suicide by sending information on WhatsApp in kovai