ஏன்டா ஏன்? பேனா பென்சில் விவகாரத்தில் அரிவாள் வெட்டு....!!! 8 -ம் வகுப்பு மாணவனின் வெறிச்செயல்...!
A scythe cut pen and pencil issue madness 8th grade student
நெல்லையில் பாளையங்கோட்டை பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் வெட்டினான். இதில் மாணவன் படுகாயம் அடைந்தார். இதைத் தடுக்க சென்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள் இருவரையும் அங்கிருந்து மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மாணவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சக மாணவனை வெட்டிய 8-ம் வகுப்பு மாணவன் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடமிருந்து அரிவாளை கைப்பற்றிய காவலர்கள், இது தொடர்பாக மாணவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு மாணவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும்., இன்று பேனா, பென்சில் தொடர்பான தகராறில் 8-ம் வகுப்பு மாணவன்தான் கொண்டு வந்த அரிவாளால் சக மாணவனை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A scythe cut pen and pencil issue madness 8th grade student