விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
A person dies due to electric shock in Tiruvannamalai
விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(52). இவர் மக்கள் நல பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சக்கரவர்த்தி நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று உள்ளார்.
அப்பொழுது மின் கம்பத்தில் இருந்து ஒரு கம்பி அறுந்து வரப்பில் விழுந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காத சக்கரவர்த்தி மின் கம்பியை மிதித்துள்ளார்.
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கலசப்பாக்கம் காவல்துறையினர் சக்கரவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A person dies due to electric shock in Tiruvannamalai