கடலின் அழகை ரசிக்க மரத்திலான புதிய பாதை..!
A new wooden path to enjoy the beauty of the sea
சென்னையில் உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையின் அழகை ரசிக்க முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக மரத்திலான நிரந்தர நடை பாதை வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையை விடுமுறை தினங்கள் மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சென்று ரசித்து வருகிறார்கள். இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் பொழுது போக்குக்காக வருகிறார்கள்.
இதில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக முதலில் தற்காலிக நடைபாதை வசதி ஏற்படுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்பட்டு பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் நிரந்தர மரத்திலான நடைபாதை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் முதியோர் மாற்றுத்திறனாளிகளுக்காக இந்த நடைபாதை வசதி திறந்து விடப்பட உள்ளது.
இந்த மரத்திலான நடை பாதையில் முதியோர்கள் சக்கர நாற்காலியில் கூட செல்லலாம். இந்த நடைபாதையின் மூலம் கடற்கரையின் அழகை எளிதில் சென்று ரசிக்க முடியும். இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
A new wooden path to enjoy the beauty of the sea