4 வயது மகனுக்கு பேச்சுவரவில்லை... மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தாய்..! - Seithipunal
Seithipunal


மகனுக்கு பேச்சுவரவில்லை என்பதால் குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாசாலை பகுதியில் வசித்து வருபவர் ஷோபா. இவருக்கு  ஹ்ரித்திக் (4) என்ற மகன் இருக்கிறான்.  ஹ்ரித்திக்கு பேச்சுவராததால் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை செய்து வருகிறார். 

ஆனால், சிகிச்சை பலனளிக்காததால் ஷோபா மன அழுத்ததில் இருந்தார். இந்நிலையில், அவரது தாய் வீட்டிற்கு சென்ற அவர் குழந்தையை  தலையணையை வைத்து கொலை செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A mother who killed her son and committed suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal