தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!! மதுவில் இருந்து மீள முடியவில்லை என உருக்கமான கடிதம்..!! - Seithipunal
Seithipunal


மது பழக்கத்திற்கு அடிமையானதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், ஐயம்பட்டியை பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவர் தமிழ்நாடுமின்வாரியத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நாட்கள் செல்ல செல்ல அவரின் இந்த பழக்கம் அதிகமாகி வந்துள்ளது. ஒருகட்டத்தில் அவர் மது இல்லாமல் வாழமுடியாது என்ற நிலைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்து பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

 இதனை அடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது அவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.

அதில் மதுவுக்கு அடிமையனதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் உறவினர்கள் நண்பர்கள் என்னை மன்னித்துவிடும் படியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பூரண மதுவிலக்கால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளை தடுக்கமுடியும். மேலும் தற்கொலை என்பது எந்த வித பிரச்சனைக்கும் தீர்வல்ல என்பதை நாம்  நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man commited to suicide


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal