ரூ.1500 வழிப்பறி! சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் பகீர்! வழிப்பறி கும்பல் கைது!
A Gang Robbery From The Youngster
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரவீன் குமார். தன்னுடைய நண்பர் வீட்டு விசேஷம் ஒன்றிற்க்கு கடந்த 5 ஆம் தேதி சென்று இருக்கிறார். விசேஷத்தை முடித்துவிட்டு இரவு ஒரு மணி அளவில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து நின்று மிரட்டி இருக்கிறது. தொடர்ந்து பிரவீன் குமாரை கத்தியை காட்டி மிரட்டியும் வாய் தகராறிலும் அந்த கும்பல் ஈடுபட்டு இருக்கிறது.

பின்னர் அவரிடம் இருந்த ரூபாய் 1500 யை அந்த கும்பல் பிடுங்கிச் சென்றிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆகாஷ் சஞ்சய் வேலன் ஆகிய மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.குற்றத்திற்கு அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் , பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைதான ஆகாஷ் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகளும் , விஜய் மீது நான்கு வழக்குகளும் இருப்பதாக போலீசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
A Gang Robbery From The Youngster