கேவலம் காசுக்காக தந்தையே இப்படி செய்யலாமா?! கும்பகோணம் அருகே விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


தந்தையே தனது மகனை கடனுக்காக அடமானம் வைத்த கொடுமை கும்பகோணம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. 

புதுக்கோட்டை பகுதி கரம்பக்குடியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் திருமணம் செய்ததில் ஒரு மகன் பத்து வயதில் இருக்கின்றான். சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தைச் சேர்ந்த முருகானந்தன் என்பவரிடம் வெள்ளைச்சாமி 40,000 பணத்தை பெற்றுக்கொண்டு மகனை அடமானம் வைத்து இருக்கின்றார். 

முருகானந்தன் வெள்ளைச்சாமியின் மகனை பண்ணையில் இருக்கும் ஆடுகளை மேய்க்க கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கி வந்துள்ளார். தந்தை வாங்கிய கடனுக்காக சிறுவனும் மூன்று ஆண்டுகளாக அங்கு ஆடு மேய்த்து வந்துள்ளார். இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இந்த தகவலை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு பாபநாசம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அந்த சிறுவனை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீட்டனர். அத்துடன் முருகானந்தம் மீது கொத்தடிமைகள் மீட்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். பெற்ற மகனையே பணத்திற்காக அடமானம் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

a father sale his son for money in kumbakonam


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->