அமுதசுரபி ஊழியர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும்..தமிழர் களம் வலியுறுத்தல்!
A case should be filed by the police against the Amuthasurabi employees Tamil activists emphasize
தமிழ் ஆர்வலர்களை கைது செய்ய சொல்லி? பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறிலில் ஈடுபட்ட அமுதசுரபி ஊழியர்கள் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழர் களம் கோ.அழகர்
கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுவை அரசின் அரசாணையை மதிக்காமல் அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி மருந்தகத்தில் தமிழ் மொழியை முற்றிலும் புறக்கணிப்பு செய்து ஆங்கிலத்தில் மட்டுமே விளம்பரப்பதாகை வைத்திருந்தனர். அதனைக் கண்ட தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு அவப்பெயர் வரக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் தமிழ் மொழி இல்லாத அந்தப் பெயர் பலகையை அப்புறப்படுத்தினார்கள்.
அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் ஆங்கில பெயர் பலகையை அகற்றிய தமிழ் உரிமை அமைப்பு தலைவர்களுக்கு எதிராக 100 அரசு ஊழியர்களை தூண்டிவிட்டு சாலை மறியல் செய்து தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தமிழர்களம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ் மொழிக்காகவும் இந்த இனத்திற்காகவும் தொடர்ந்து போராடி பல வழக்குகளை பெற்ற போராளிகளுக்கு இந்த வழக்கு பெரிதல்ல ! தன் உயிரை இழந்து தமிழ் மொழியைக்காக்க இந்த இனத்தில் போராளிகள் தொடர்ந்து பிறந்து கொண்டுதான் இருப்பார்கள் அதை யாரும் தடுத்து விட முடியாது.
ஆனால் நமது தாய்மொழி தமிழைக் காக்க போராடியவர்களை ஒடுக்கும் நோக்கத்தில் மருத்துவமனை பகுதி என்றும் பாராமல் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி நோயாளிகளை துன்புறுத்தும் விதமாக ஊழியர்கள் சாலை மறியல் செய்வது வேதனை அளிக்கிறது. இப்படி அரசு ஊழியர்களை சட்டத்துக்கு விரோதமாக தூண்டி விட்ட அதிகாரிகளின் மீது இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாளை இந்த நிறுவனத்தில் ஊழியர்களுக்கு ஒரு இன்னல் என்றால் அதற்காகவும் போராடக் கூடியவர்கள் இந்த போராளிகளே என்பதை இவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் புதுச்சேரி சட்டமன்றத்தில் முதலமைச்சர் அனைத்து வணிக நிறுவனங்களிலும் வைக்கப்படும் பெயர் பலகைகளில் தமிழ் எழுத்து முதலில் பெரிதாக இருக்க வேண்டும் என்ற ஆணையை வெளியிட்ட பிறகும். அதனை துளியும் மதிக்காமல், முதலமைச்சரை அவமானப்படுத்தும் விதமாக முற்றிலும் தமிழ் மொழியை அகற்றிவிட்டு ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகை வைத்த அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மீதும் அதிகாரிகளுக்கு உடந்தையாக தான் ஒரு அரசு ஊழியர் என்பதை மறந்தும் சாலையில் இறங்கி மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலை மறியல் செய்த அனைத்து ஊழியர்கள் மீதும் காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழர் களம் அமைப்பின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்என தமிழர் களம் கோ.அழகர்கோரிக்கை விடுத்துள்ளார்.-
English Summary
A case should be filed by the police against the Amuthasurabi employees Tamil activists emphasize