நடத்தையில் சந்தேகம்: மனைவிக்கு அடி உதை: மகனின் உடலில் 19 சூடு வைத்த கொடூர தந்தை..!
Cruel father sets 19 arsons on son's body over suspicion of wifes behavior
சென்னையில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு மகனின் உடலில் 19 இடங்களில் கணவர் சூடு வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ராஜ்கண்ணன் என்ற இவர்சென்னையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில் மனைவி மேல் சந்தேகப்பட்டு, அவரை அடித்து உதைத்துள்ளார்.
அத்துடன், மனைவி மீது உள்ள ஆத்திரத்தில் தனது 08 வயது மகனின் உடலில் சூடுவைத்ததாக கூறப்படுகிறது. இதனால் துடிதுடித்து பேயுள்ளான். அந்த சிறுவனை பலத்த காயங்களுடன் மன்னார் குடிக்கு அழைத்து சென்று சிறுவனை அங்குஉள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.
மருத்துவர்களின் விசாரணையில் தந்தையே சூடுவைத்த கொடுமை படுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சூடுவைத்த ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Cruel father sets 19 arsons on son's body over suspicion of wifes behavior