இளம்பெண்ணை பலாத்காரம் செய்த சகோதரன்..காதலை கைவிடமறுத்ததால் ஆத்திரம்! - Seithipunal
Seithipunal


குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் இளம்பெண்ணை சகோதரன் 2 முறை பாலியல் பலாத்காரம் செய்து  வலது தொடையில் பீடியால் சூடும் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் பவநகர் மாவட்டத்தில் தலஜா நகரருகே கிராமம் ஒன்றில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது, 22 வயது இளம்பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் 29 வயது மூத்த சகோதரருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் 29 வயது ஆன அந்த மூத்த சகோதரருக்கு திருமணம் நடந்து விட்டது. மனைவியும் அந்த வீட்டில் வசித்து வந்தார் ,இந்நிலையில், அவருடைய மனைவி கடந்த ஜூலை 13-ந்தேதி வெளியூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தபோது, அந்த நபர் இளம்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இதன்பின்னர், கடந்த ஆகஸ்டு 22-ந்தேதி 2-வது முறையாகவும் சகோதரியை அந்நபர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது . அதனுடன் மட்டுமல்லாமல் அந்த இளம்பெண்ணின் வலது தொடையில் பீடியால் சூடும் வைத்துள்ளார்.

இதனால், அலறி துடித்த அந்த இளம்பெண் , புகார் அளிக்க முடிவு செய்து போலீசுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண் அந்த கிராமத்தில் உள்ள இளைஞரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையில் இந்த விவரம் மூத்த சகோதரருக்கு முன்பே தெரியவர் காதலை கைவிட செய்யும் வகையில், அதனை பயன்படுத்தி அவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது . இந்த விவரம் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.பாதிக்கப்பட்ட இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன 

மேலும் இதுபற்றி விசாரணை அதிகாரி டி.பி. காம்பிளா கூறும்போது, குற்றவாளி பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சம்பவத்தின்போது அவர் அணிந்திருந்த ஆடைகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன என்று கூறினார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teenage girl raped by brother Angry at not giving up love


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->