என் மீது திட்டமிட்டு அவதூறு..அலறும் MLA!
The MLA is intentionally harassing me
வில்லியனூர் தொகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கெடக்கூடாது: நிலத்திற்கு உரியவர்களே எடுத்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று தன் மீது அவதூறு பரப்பும் நோக்கில் வெளியான வீடியோ குறித்து எதிர்கட்சி தலைவர் இரா. சிவா ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக அமைப்பாளருமான இரா. சிவா அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:திமுக விவசாய அணியை சேர்ந்த ஒதியம்பட்டு குலேசகரன் அப்பகுதியில் உள்ள நிலத்தை அவரது உறவினரிடம் குத்தகை பெற்று 100 ஆண்டுகளுக்கும் மேலாக, 3 தலைமுறைகளாக குத்தகை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காட்டேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஐ.ஆர்.பி.என் காவலர் கார்த்திகேயன் கடந்த 16.8.25 அன்று 40 அடியாட்களுடன் குலசேகரன் பயிர் செய்யும் குத்தகை நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து, ரவுடியிசம் செய்துள்ளார். இதுபற்றி குலசேகரன் என்னிடம் தெரிவித்தார். உடன் நான் போலீசாரை தொடர்பு கொண்டு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினேன். வில்லியனூர் போலீசார் உடனயாக நடவடிக்கை எடுக்காததால், டிஐஜி, எஸ்.எஸ்.பி ஆகியோரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க செய்தேன்.
மேலும் ஐஆர்பிஎன் காவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் எனது வீட்டிற்கு வந்தனர். அப்போது நிலப்பிரச்சனை தொடர்பாக நான் பேசுவது இல்லை. நீதிமன்றம் அல்லது கலெக்டர் அலுவலகம் சென்று அது யாருடைய சொத்தோ, எடுத்து கொள்ளுங்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனை செய்யாதீர்கள் என்று கூறி அனுப்பிவிட்டேன். வெளியே போகும்போது நான் செய்த சம்பவத்திற்கு சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தே என்மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறிக் கொண்டே சென்றார்.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் என் மீது அவதூறு பரப்பும் நோக்கில் ஆளுநர் மாளிகை முன்பு சிலர் பேட்டி அளித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வில்லியனூரில் எனக்குள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கில் புகார் கூறுகின்றனர். வில்லியனூர் தொகுதியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட கூடாது, நிலம் யாருக்கு சொந்தமோ அவர்கள் எடுத்து கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
The MLA is intentionally harassing me