50% இறக்குமதி வரி உயர்வு எதிரொலி..ஆ. ராசா  தலைமையில் கூட்டணி கட்சியினர் போராட்டம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி உயர்வால்,  தமிழ்நாட்டில், திருப்பூர், கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி  ஆ. ராசா அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..


அமெரிக்காவின் 50% இறக்குமதி வரி உயர்வால்,  தமிழ்நாட்டில், திருப்பூர், கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, ஒன்றிய பாஜக அரசு உரிய நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வலியுறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க,  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், இன்று திருப்பூரில், கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ. ராசா அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் திரு. வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் திரு. திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் அண்ணன். திரு. ஈ.ஆர்.ஈஸ்வரன்,  தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. தங்கபாலு,   மாண்புமிகு மக்களவை உறுப்பினர்கள் திரு. வெங்கடேசன் மற்றும் திரு. சுப்பராயன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் திரு. ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுச் செயலாளர் திரு. முகமது அபுபக்கர், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் திரு. தமிமுன் அன்சாரி, மக்கள் நீதி மய்யம் மாநில துணை தலைவர் திரு. தங்கவேல், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் திரு. ராமகிருட்டிணன், ஆதி தமிழர் பேரவை நிறுவன தலைவர் திரு. அதியமான் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில்முனைவோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்...


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

50% increase in import duty backlash Under the leadership of A Rasa the coalition party members are protesting


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->