8 மணி நேர கனமழையால் திணறிய சென்னை.. 3 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையில், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, டி நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்ஆர்சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம், கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் 8 மணி நேரத்திற்கு மேலாக தொடர் கனமழை கொட்டித் தீர்த்தது.

மேலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சென்னையில் கனமழை காரணமாக 27 இடங்களில் மரங்கள் சாய்ந்து உள்ளது. தற்போது அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 hours heavy rain in chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->