717 டாஸ்மாக் கடைகள் மூடல்...மதுவிலக்கு பாதையில் தமிழகம்...? - முதலமைச்சர் விஜயின் அதிரடி நடவடிக்கையை பாராட்டிய கமல்ஹாசன் - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாதந்தோறும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மதுபான விற்பனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் மதுவிற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஆனால், மதுப்பழக்கத்தால் ஏராளமான குடும்பங்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சீர்குலைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலுத்து வருகிறது.

இந்த சூழலில், விஜய் தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வழிபாட்டுத் தலங்கள் அருகே இயங்கும் 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் அருகே 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வரும் 255 மதுபானக் கடைகள் என மொத்தம் 717 கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாகியதிலிருந்து பல்வேறு தரப்பினரிடமிருந்து முதல்-அமைச்சர் விஜய்க்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

அந்த வகையில், கமல்ஹாசன் தனது வாழ்த்து பதிவில் முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே இயங்கும் மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்பது நீண்டநாளாக தமிழ்க் குடும்பங்களின் விருப்பமாக இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை உணர்ந்து, ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே இந்த நடவடிக்கையை முதல்-அமைச்சர் விஜய் மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

மதுபான விற்பனை என்பது ஒரு அரசின் நிரந்தர பணியாக இருக்கக் கூடாது. மாறாக, மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தி சமூக நலனை பாதுகாப்பதே அரசின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும்.

அந்த இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 கடைகள் மூடப்பட்டுள்ளன; இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும். இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். வாழ்த்துகள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

717 TASMAC shops closed Tamil Nadu path alcohol prohibition Kamal Haasan praises Chief Minister Vijay action


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->