தமிழத்தையே உலுக்கிய கோர விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு கடையில் நேற்று (சனிக்கிழமை) மாலை 3 மணி அளவில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுக் கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் பட்டாசு கடை உரிமையாளர் உள்ளிட்டோர் பலர் காயம் அடைந்தனர்.

அதேபோன்று பட்டாசு கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  11 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் வேடகட்டமடுவு ஊராட்சி டி.அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டி.அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான வேடப்பன் புதிதாக  திருமணமானவர், அவருடன் ஆதிகேசவன் (18 வயது ), சச்சின் என்கின்ற முனிவேல் ( 20 வயது), இளம்பருதி (19 வயது), விஜயராகவன் (19வயது), ஆகாஷ் (18 வயது), கிரி (18 வயது) என ஒரே கிராமத்தினைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களோடு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நீப்பத்துறை கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(18 வயது) பலியாகியுள்ளார். இவர்கள் அனைவரும் கல்லுாரி மற்றும் பள்ளி பயிலும் மாணவர்கள்  என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த பீமாராவ் (20 வயது), லோகேஷ் (21 வயது) ஆகியோர் காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்  குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 people from the same village died in krishnagiri fire accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->