இன்று பணியின் காரணமாக திருச்சி வழியாக செல்லும் 6 ரெயில்கள் ரத்து..!- திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம்
6 trains passing through Trichy cancelled due to work today Trichy Railway Divisional Office
இன்று திருச்சி ரெயில்வே கோட்டத்தின் கோட்டை - முத்தரசநல்லூர் பிரிவுக்கு இடையேயான தற்போதைய சாலை மேம்பாலம் அகற்றுதல் மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக, அந்த வழியாக செல்லும் ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், கரூர் - திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண்: 76810), திருச்சி - கரூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்- 76809), திருச்சி - ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்- 56105), மயிலாடுதுறை - சேலம் பயணிகள் ரெயில் (வண்டி எண்- 16811), சேலம் - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வண்டி எண்- 16812), ஈரோடு - திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண்- 56810) உள்ளிட்ட ரெயில்கள் முழுவதுமாக இன்று ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில்:
இதேபோல் ஈரோடு - திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண்- 56106) ஈரோட்டிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும். மேலும், இந்த ரெயில் கரூர் வரை மட்டுமே இயங்கும். அதுமட்டுமின்றி, பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16844) கரூர் வரை மட்டும் இயங்கும்.
இதில், திருச்சியிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16843) திருச்சி - கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு கரூரிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதில், காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16187) காரைக்காலிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் எர்ணாகுளத்திற்கு செல்லும்.
மேலும், கடலூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16231) கடலூரிலிருந்து மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் மைசூருக்கு சென்றடையும். இந்த ரெயில்கள் கோட்டை மற்றும் குளித்தலை ரெயில் நிலையங்களுக்கு செல்லாது. இந்த தகவல் திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
6 trains passing through Trichy cancelled due to work today Trichy Railway Divisional Office