#காவேரிப்பாக்கம் || திமுக சேர்மனை கண்டித்து 6 கவுன்சிலர்கள் கூண்டோடு ராஜினாமா.!! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சுமார் 55 பஞ்சாயத்து கிராமங்களை உள்ளடக்கிய ஒன்றியமாகும். இந்த ஒன்றியத்தில் 5 தி.மு.க கவுன்சிலர்கள், 2 சுயேச்சை கவுன்சிலர்கள், அ.தி.மு.க, பா.ம.க., காங்கிரஸ் என தலா ஒரு கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவராக திமுகவை சேர்ந்த அனிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு ஒன்றிய தலைவர் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 6 கவுன்சிலர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனிதா ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறி திமுகவை சேர்ந்த ஒன்றியக்குழு துணைத் தலைவர் முனியம்மா உட்பட திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் 6 பேர் வட்டார வளர்ச்சி அலுவலர் சைபுதீனிடம் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளனர். இந்த விவகாரம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6 councilors resign due to condemning DMK Panchayat chairman


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->