மோடி தொடங்கி வைத்த "வந்தே பாரத் ரயில்".. "அரக்கோணத்தில் மறித்த காங்கிரஸ் கட்சியினர்".. 50 பேர் அதிரடி கைது..!! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் வந்தே பாரத் ரயிலை மறித்து போராட்டம்..!!

தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் ரூ.2467 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிறகு சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வந்தடைந்த மோடி அங்கிருந்து காரில் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தார். 

பிறகு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் ரயிலானது முதல் நாளான இன்று மட்டும் பெரம்பூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 50 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு தோற்றுக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

50 Congress members arrested for blocking Vande Bharat train at Arakkonam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->