மாணவர்கள் கவனத்திற்கு.. சட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


நடபாண்டிற்கான ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால சட்டப்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப் படிப்பு 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு என இரு நிலைகளில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதில், 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் 5 ஆண்டு படிப்பையும், பட்டப்படிப்பை முடித்தவர்கள் 3 ஆண்டுகள் சட்டப்படிப்பையும் படிக்க படித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் சமீபத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 5 ஆண்டு சட்டப்படிப்பு படிப்பில் சேர்வதற்கு மே 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

அந்த வகையில் நடப்பாண்டிற்கான 5 ஆண்டு கால சட்டப் படிப்புகளில் சேர்வதற்கு மே 15ம் தேதி இன்று மாலையுடன் கால அவகாசம் முடிவடைந்த  நிலையில், தற்போது ஜூன் 10ம் தேதி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://tndalu.ac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 years law of education apply extended to June 10


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->