ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டு சிறை தண்டனை - தெற்கு ரயில்வே எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


ரயில் மீது கல் எறிந்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

போராட்டங்கள் மற்றும் கலவரங்களின் போது ரயில் மீது கல்லெறியும் சம்பவம் சமீப காலமாக அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரயில் மீது கல் எறிவது தண்டனைக்குரிய குற்றம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, பெங்களூரு - சென்னை பிருந்தாவன் ரயில் ஜோலார்பேட்டை அருகே வந்தபோது சிறுவர்கள் விளையாட்டாக கல் வீசியதில் ரயிலின் முகப்பு கண்ணாடி உடைந்தது. இதனையடுத்து பெற்றோர்களை அழைத்து அதிகாரிகள் கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ரயில் மீது கல் எறிவது தண்டனைக்குரிய குற்றம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 153ன் படி 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 years imprisonment for throwing stones at trains Southern Railway Warning


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->