மாணவர்கள் மட்டுமே குறி! ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை செய்த 5 பேர் கைது!
5 people arrested for selling drugs online in madurai
மதுரையில் ஆன்லைன் மூலமாக கோதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்து கடை உரிமையாளர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று உழவர் சந்தை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஆட்டோவை போலீசார் சோதனை செய்ய முயன்றனர். அப்போது ஆட்டோவில் இருந்தவர்கள் இறங்கி தப்பி ஓட முயன்றதால் மடக்கி பிடித்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களிடம் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 110 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்த மருந்து கடை உரிமையாளர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
5 people arrested for selling drugs online in madurai