தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேர் கைது..!! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் அருகே கலைமகள் காம்ப்ளக்ஸில் சிலர் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இந்த தகவலையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பரமத்திவேலூர் தெற்கு தெருவை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளின் முடிவுகளை வெளியிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஐந்து செல்போன்கள் மற்றும் ரூ.60 ஆயிரம் பணம் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுகளை கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் எடுத்து விற்பனை செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 people arrested for selling lottery tickets in namakkal


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->