ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து மூன்று மாத குழந்தை பலி.. திருவண்ணாமலை அருகே நிகழ்ந்த சோகம்..!
3 months baby death in Thiruvannamalai
ஸ்பீக்கர் விழுந்து மூன்று மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், பிச்சானந்தல் பகுதியை சேர்ந்தவர் பரணி. இவருக்கு சுபஸ்ரீ என்ற மூன்றுமாத குழந்தை உள்ளது. இந்நிலையில், சம்பவதன்று ஹாலில் சுபஸ்ரீ படுக்க வைத்துவிட்டு பரணி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு அலமாரியில் உள்ள ஸ்லாப்பில் அடுக்கி வைத்திருந்த ஸ்பீக்கர் குழந்தை மீது விழுந்தது.

இதனை கண்டு பரணி கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
3 months baby death in Thiruvannamalai