கேட்பாரற்று கிடந்த 28 கிலோ கஞ்சா..சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு!
28 kilos of cannabis found without any ear marks commotion at the Central Railway Station
சென்டிரல் ரெயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டில் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது, இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதை விட இளைஞர்கள் இந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர்.இதை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், ஒரு புறம் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பொதுவாக தமிழகத்தில் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி விடுகின்றனர்.இதனை தடுக்கும் பொருட்டு தமிழக காவல்துறை பல்வேறு ஆப்ரேசன் முறைகளை கையாண்டு நடவடிக்கையை தீவிரபடுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்டிரல் ரெயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் நேற்று கேட்பாரற்று பெட்டி கிடந்தது.
இது குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார், பெட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில்,28 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார், பூக்கடை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வரும் நிலையில் அங்கு யார் கஞ்சாவை வைத்து சென்றது என போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.
English Summary
28 kilos of cannabis found without any ear marks commotion at the Central Railway Station