தமிழகத்தில் இன்று (26.11.2022) எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.. முழு விபரம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (நவம்பர் 26ம் தேதி) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கோவை

அரசூா் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

சென்னை

சென்னையில் கீழ்கண்ட பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

தாம்பரம்

கடப்பேரி எம்.ஐ.டி, ராதா நகர், நேரு நகர், பழைய அஸ்தினாபுரம் ரோடு, பட்டேல் தெரு, ராஜாஜி தெரு, ஆனந்த நிலையம், ஆர்.பி.ரோடு, நல்லப்பா தெரு, அகநானூறு தெரு மற்றும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐடி காரிடர்

தரமணி கே.பி.கே.நகர், நேரு நகர் அனைத்து லிங்க் ரோடு, ரமணியாம் அப்பார்ட்மென்ட்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர்

சிட்கோ நகர், மோகன் ரெட்டி மருத்துவமனை, எம்பார் நாயுடு தெரு, எம்.டி.எச் ரோடு, புழல், விநாயகபுரம் முழுவதும், காஞ்சி நகர், செங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

26.11.2022 power cut places in tamilnadu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->