''25 பைசாக்கு பிரியாணி''... அதிரடி சலுகை கொடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வேலூர் மாவட்டம், ஆரணி சாலையில் நேற்று பிரியாணி கடை புதிதாக திறக்கப்பட்டது. இந்த கடையை பெரிதாக விளம்பரப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் வலைத்தளங்கள் மற்றும் போஸ்டர்கள் வாயிலாக நூதனமான அறிவிப்பு வெளியிட்டார்கள். 

அந்த அறிவிப்பில், கடை திறந்த அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை பழைய செல்லாத 25 பைசா நாணயம் கொண்டு வந்தால் அவர்களுக்கு, அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று  அறிவித்தார்கள். 25 பைசாவா அதெல்லாம் தூக்கி போட்டு  எத்தனை காலம் ஆகுது.  

அதனால் , யாரும் வர மாட்டார்கள், அப்படி வந்தால் ஒரு சிலர் மட்டுமே வருவார்கள் என்று அந்த கடை உரிமையாளர் யோசித்து தான் இந்த மாதிரியான சலுகையை அறிவித்திருக்கிறார். ஆனால் அன்று காலை அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்பது போல் நடந்து விட்டது. அன்று காலை 10 மணிக்கே மக்கள் கூட்டம் பழைய 25 பைசா நாணயத்துடன் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தது. 

இதை தொடர்ந்து, அங்கு வந்த கடை உரிமையாளர், கூட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார், பின்னர் வேறுவழியின்றி 200 பேருக்கு மட்டும் 25 பைசா நாணயத்தைப் பெற்றுக்கொண்டு பிரியாணி வழங்கினார். இதுகுறித்து கூறியுள்ள அவர், பழைய நாணயங்களை மக்களுக்கு நினைவூட்டவே இப்படி அறிவித்தேன். ஆனால்  இவ்வளவு  பேரிடம் 25 பைசா இருப்பது இன்று தான் தெரிகிறது என்று அவர் கூறியிருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 paise biriyani in vellore


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal