அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்; 'அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை; அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு பாதிப்பு ; உயர் நீதிமன்றத்தில் தவெக வழக்கு..! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு அரசியல் கட்சிகளின்  கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தயாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, 

கட்சியின் கூட்டம் தொடங்குவதற்கு 02 மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே தொண்டர்களை அனுமதிக்க வேண்டும்.

முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 50% மேல் மக்கள் கூடினால் அது விதிமீறலாகக் கருதப்படும்.

குடிநீர் கழிவறை வசதிகள், முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட இடங்களில் கூட்டம் நடத்த 10 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

போன்ற பல்வேறு விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு கடந்த ஜனவரி 05-ஆம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் சாலை வளங்களை முறைப்படுத்தும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றுவதற்கு சாத்தியமில்லாத வகையில் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும், புதிய வழிகாட்டு நெறிமுறைகளால் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகள் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The TVK has filed a case in the High Court against the guidelines issued by the government


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->