2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 15.69 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படலாம் என மதிப்பீடு..!
The budget for the 2025 to 26 financial year is estimated to have a deficit of Rs 15 69 00 00 00 000
ஒவ்வொரு முறையும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது கிடைக்கப்பெறும் வருமானம், செலவினம் ஆகியவற்றை கணக்கீடு செய்து தோராயமான நிதி பற்றாக்குறை வெளியிடுவது வழக்கம்.
அதன்படி 2025-26-ஆம் நிதி ஆண்டிக்கான பட்ஜெட்டில், ஜிடிபி-யில் 4.4 சதவீதம் அல்லது 15.69 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படலாம் என மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் மாதம் வரை நிதி பற்றாக்குறை 8.55 லட்சம் கோடி ரூபாய் அல்லது 54.5 சதவீதம் என சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. 2024-2025 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 56.7 சதவீதமாக இருந்தது.
அத்தோடு, டிசம்பர் மாதம் வரை 25.25 கோடி ரூபாய் அல்லது பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டதில் 72.2 சதவீதம் வருவாய் பெறப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் வரை, மத்திய அரசால் செய்யப்பட்ட மொத்த செலவினம் ரூ. 33.8 லட்சம் கோடியாக இருந்தது என்றும், இது 2025-26 ஆம் ஆண்டுக்கான தொடர்புடைய வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 66.7 சதவீதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The budget for the 2025 to 26 financial year is estimated to have a deficit of Rs 15 69 00 00 00 000