'ராகுல் காந்தி தெளிவான பார்வை கொண்ட தலைவர் மற்றும் மதவாதம் வெறுப்பு எதிராகத் குரல்'; சசி தரூர் பாராட்டு..!
Shashi Tharoor praises Rahul Gandhi calling him a leader with a clear vision and a voice against communalism and hatred
ராகுல் காந்தி தெளிவான பார்வை கொண்ட தலைவர் மற்றும் மதவாதத்திற்கு எதிரான நாட்டின் வலுவான குரல் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர் பாராட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சசி தரூர் சந்தித்துப் பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில் தமக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் பேசித் தீர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, ராகுல் காந்தியை பொறுப்புள்ள மற்றும் தெளிவான பார்வை கொண்ட தலைவர் என பாராட்டியுள்ளார். மேலும், மதவாதம், வெறுப்பு அரசியல் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராகுல் காந்தியை அனைவருக்கும் பிடிக்கும், எனக்கும் அவரிடம் மாற்றுக் கருத்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது கருத்துக்கள் பாஜகவிற்கு ஆதரவாக ஊடகங்களால் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகவும் நாட்டின் நலன் சார்ந்த விஷயங்களில் மட்டுமே தான் அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் சசி தரூர் கூறியுள்ளார்.
''நான் ஒரு காங்கிரஸ்காரன், கட்சியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். வரும் கேரளா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்காக முழுமையாகப் பணியாற்றுவேன்" என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Shashi Tharoor praises Rahul Gandhi calling him a leader with a clear vision and a voice against communalism and hatred