பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு கிடையாது.. வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்காமல் ரொக்கமாக பணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

இதில், கடந்த 2022 ஆம் ஆண்டு சுமார் 2 15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து ரேஷன் கடை மூலமாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்படுத்தியது.

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் அதில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவபோது அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 அதன்படி இந்த ஆண்டு எந்த ஒரு பரிசு பொருளும் வழங்காமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பணம் வழங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு க ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 பணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2023 Pongal festival govt not give Pongal gift


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->