#Breaking :: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 2000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்..!! - Seithipunal
Seithipunal


மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் இன்று (டிச.12) காலை 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகல் முதல் வினாடிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர் வளவத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏரிகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தக் கூடும் என தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2000 cubic feet excess water discharge from Chembarambakkam lake


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->