+2 தேர்வு முடிவு - புதுச்சேரி, காரைக்கால் தேர்ச்சி விழுக்காடு 98.53%
+2 Result Puducherry Karaikal Pass Percentage 98.53%
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் புதுச்சேரியில் 3,794 மாணவர்களும் 3,659 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தேர்ச்சி விழுக்காடு 98.53% ஆகும்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், எழுதினார்கள்.
இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகி உள்ளது. பொதுத்தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காலை 9 மணிக்கு வெளியிட்டார்.இதில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்களின் பட்டியலில் அரியலூர் முதல் இடம் பிடித்துள்ளது.
+2 தேர்வு முடிவு - புதுச்சேரி, காரைக்கால் தேர்ச்சி விழுக்காடு 98.53%
இதேபோல கடந்த மார்ச் 2025ல் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் 101 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சார்ந்த 3,881 மாணவர்களும் 3,683 மாணவிகளும் ஆக மொத்தம் 7,564 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 7,453 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3,794 மாணவர்களும் 3,659 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98.53% என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
English Summary
+2 Result Puducherry Karaikal Pass Percentage 98.53%