கடனை வசூலிக்க சென்ற நகைக்கடை வியாபாரி.. வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.!
1.5kg gold robbery in nellai
திருநெல்வேலி சிந்துபூந்துறையில் நகை வியாபாரி வீட்டில் 1.5 கிலோ தங்கநகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிந்தபூந்துறையில் அனுமந்த ராம் என்பவர் தனது தாய் மாமன் சென்று நெல்லூர் பகுதியில் மொத்த நகை கடை வியாபாரம் செய்து வருகிறார்.
அதன்படி திருநெல்வேலி தென்காசி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நகை கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் நகைகளை வைத்துவிட்டு அருகில் உள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் கொடுத்த நகைக்கான பணத்தை வசூல் செய்வதற்காக சென்றுள்ளார்.
பணத்தை வசூல் செய்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் 1.5 கிலோ தங்க நகைகள் காணாமல் போயுள்ளது. இதனையடுத்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த முதல் கட்ட விசாரணையில் வீட்டின் பூட்டை திறந்து மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சந்தேகத்திற்குரிய நபர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
1.5kg gold robbery in nellai