15 ஆண்டுகள் பழைய திருவான்மியூர் கொலை வழக்கு: விடுதலை ரத்து… 7 பேருக்கு ஆயுள் தண்டனை...! - Seithipunal
Seithipunal


15 ஆண்டுகளுக்கு முன்பு திருவான்மியூரில் நடந்த அதிர்ச்சி கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக, முன்பு விடுதலை செய்யப்பட்டிருந்த 2 பெண்கள் உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருவான்மியூரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 16 பேருக்கு எதிராக காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்து 2017 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்குட்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து காவல்துறை மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு விசாரணையில், கொலையை நேரில் பார்த்ததாக தெரிவிக்கப்பட்ட ஏழுமலையின் மனைவி மற்றும் குழந்தைகளின் சாட்சியங்களை கீழமை நீதிமன்றம் முறையாக பரிசீலிக்கவில்லை என்றும், சிறிய முரண்பாடுகளை காரணம் காட்டி குற்றவாளிகளை ஒட்டுமொத்தமாக விடுதலை செய்திருப்பது தவறு என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் 7 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 9 பேரின் மீது மேல்முறையீட்டு நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தியது. திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை சம்பவத்தில் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட விடுதலைத் தீர்ப்பு ஏற்க முடியாதது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, 9 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள், முதலில் ஆஜரான இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா அபராதம் விதித்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லட்சுமி, செல்வி உள்ளிட்ட 2 பெண்கள் மற்றும் சரவணன், அப்புனு, குருமூர்த்தி, ஹரிஹரன், நாகராஜன் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் நிராகரித்த நீதிமன்றம், உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

15 year old Thiruvanmiyur murder case Release revoked 7 people sentenced life imprisonment


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->