மதுரையை மிரட்டும் டெங்கு! ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா? திணறும் சுகாதாரத்துறை!
15 people affected by dengue fever in one day in Madurai
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் கொளுத்த மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இது போன்ற அசாதாரண தட்பவெப்ப நிலை காரணமாக நன்னீரில் வளரும் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
இதனால் தமிழக முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் வேகம் எடுத்துள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக குவிய தொடங்கியுள்ளனர்.

அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த அளவிற்கு தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியாகி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளே தெரிவித்துள்ளனர்.
English Summary
15 people affected by dengue fever in one day in Madurai