#BREAKING : யானை நடமாட்டம்.. கம்பம் நகராட்சியில் 144 தடை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!
144 rule in theni kambam
அரிக்கொம்பன் யானை அட்டகாசத்தால் கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் நுழைந்த அரிக்கொம்பன் யானை அங்குள்ள மக்களை விரட்டும் அச்சத்திற்குரிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த யானை இதுவரை 18 பேரை கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யானை மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்த நாள் கம்பம் பகுதியில் பதற்றுமான சூழ்நிலை நிலவுகிறது. வனத்துறையினர் யாரையாய் பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை முகமிட்டுள்ள கம்பம் நகராட்சியில் பொதுமக்கள் வெளியில் வராமல் இருக்க மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பொள்ளாச்சி யானைகள் முகாமிலிருந்து 2 கும்கி யானைகளை வரவழைக்கவும் வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.