#BREAKING || ஆவடியில் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை.! பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் விபரீதம்.!
12 th class student commits suicide in avadi
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில் பொது தேர்வில் தோல்வியடைந்த ஆவடியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் 12 ஆம் வகுப்பு மாணவன் தேவா (16). இன்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேவா, பொதுத்தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் மனவேதனை அடைந்த தேவா விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
12 th class student commits suicide in avadi