அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை.. விண்ணப்பிப்பது எப்படி.? - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பள்ளிகளில் 2023 - 2024 நடப்பு கல்வியாண்டில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி அரசு நடத்தும் திறனாய்வு தேர்வில் கலந்துகொண்டு முதல் 1000 இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் அவர்களின் இளங்கலை பட்டப்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும்.

இதற்கான திறனாய்வு தேர்வு வரும் செப்டம்பர் 23ஆம் தேதி அன்று முதல் தாள் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணி முதல் 4:00 மணி வரையிலும் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வில் 9 மற்றும் 10ம் வகுப்பு பாடத்தில் இருந்து கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

இந்த தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணமாக 50 ரூபாய் சேர்த்து தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஆகஸ்ட் 18ம் தேதி கடைசி நாளாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

11th std 10000 scholarship


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->