10ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற கட்டாயமில்லை-பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த ஒரு படத்தில் மட்டும் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் இல்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழில் கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமா இல்லையா என்பது குறித்த குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்த நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழில் கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் இல்லை என்றும் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

மேலும், தேசிய கல்விக் கொள்கையில் எந்த அம்சத்தையும் அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10th std students not compulsory pass in vacatinal subject


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->