பெரும் சோகம்.. தேர்வு முடிவு பார்க்காமலே 10ம் வகுப்பு மாணவன் பலி.!!
10th class student die in road accident in Chennai
சென்னை அடுத்த மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த ஜீவா என்ற மாணவன் மதுரவாயில் பாலத்தின் கீழே இன்று காலை இரு சக்கர வாகனத்தில் வந்த போது, லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில் அதனை கூட பார்க்க முடியாமல் மாணவன் ஜீவா சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் சாலையிலேயே வண்டியை நிறுத்தி விட்டு தலைமறைவாகி உள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
10th class student die in road accident in Chennai