வரலாறு பாடப்பிரிவில் 100/100 மதிப்பெண்..புதுச்சேரி மாணவி சாதனை!
100/100 marks in History subject Puducherry student achieves feat
வரலாறு பாடப்பிரிவில் தமிழகம், புதுச்சேரி அளவில் 100/100 மதிப்பெண் எடுத்து ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது.ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.
இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 பொதுதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.இதில் புதுச்சேரி, காரைக்காலில் 3 ஆயிரத்து 794 மாணவர்கள், 3 ஆயிரத்து 659 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 453 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மொத்த தேர்ச்சி சதவீதம் 98.53 ஆகும்.
புதுச்சேரியில் 98.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.காரைக்காலில் தேர்ச்சி சதவீதம் 98.12 ஆகும்.புதுச்சேரியில் 51 பள்ளிகள், காரைக்காலில் 12 பள்ளிகள் என மொத்தம் 63 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தம் 582 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.வரலாறு பாடப்பிரிவில் தமிழகம், புதுச்சேரி அளவில் 100/100 மதிப்பெண் எடுத்து ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.
English Summary
100/100 marks in History subject Puducherry student achieves feat